பெரம்பலூர்: பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஏடிஎஸ்பி

60பார்த்தது
பெரம்பலூர்: பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஏடிஎஸ்பி
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் 10.12.2024-ம் தேதி கீழப்புலியூர் கிராமத்தில் உள்ள விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளிடம் போதைப்பொருட்களுக்கு அடிமையாகாதல் மற்றும் அவற்றினால் ஏற்படும் விளைவுகள், உடலுறுப்புகள் செயலிழத்தல் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். 

மேலும் கள்ளச்சாராயம், கஞ்சா, குட்கா போன்ற உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் போதைப்பொருட்களை உபயோகித்து உயிரிழப்பவர்களின் குடும்பங்கள் படும் துயரங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெரம்பலூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ், சமூக நீதி மற்றும் மனிதஉரிமைகள் துணைக்காவல் கண்காணிப்பாளர் பிரபு, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் வேலுசாமி, மங்களமேடு காவல் ஆய்வாளர் பாலாஜி, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மருத்துவர் வனிதா ஆகியோர்கள் கலந்துகொண்டு மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

தொடர்புடைய செய்தி