திருவண்ணாமலை கார்த்திகை மகாதீப விழா மற்றும் கிரிவலத்தை ஒட்டி காவல் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளனர். அதில், நீர்மோர் வழங்குதல், திலகமிடுதல், ஆசிர்வதித்தல் என்ற போர்வையில் ஏமாற்றி, மிரட்டி பணம் வசூலிப்பது குற்றம் எனவும், குற்றச் செயல்களை கண்காணிக்க கிரிவலப்பாதையில் பிரத்யேகமாக காவல் அதிவிரைவுப் படை ரோந்து செல்லும் எனவும் கூறியுள்ளனர். மேலும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் உடனடியாக கைது, கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.