

காதலியை கவர புலிக் குகையில் இறங்கிய நபர்
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள விலங்கியல் பூங்காவில் இளைஞர் ஒருவர் புலி அடைக்கப்பட்டிருந்த இடத்திற்குள் நுழைந்தார். பின் வெளியே வந்த அவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. காதலி கூறியதால் தான் இதைச் செய்ததாக காவல்துறையிடம் அவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இது போன்று உஸ்பெக்கிஸ்தான் இளைஞர் ஒருவர் தான் வேலை செய்யும் விலங்கியல் பூங்காவில் இருக்கும் சிங்கங்களின் கூண்டிற்குள் சென்று சிங்கம் தாக்கி தனது உயிரை இழந்தார். நன்றி: BBC