தமிழகம்: ரயில் தண்டவாளத்தில் விரிசல்.. பெரும் விபத்து தவிர்ப்பு

57பார்த்தது
கரூர் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. திருக்காம்புலியூர் பகுதியில் கரூர் - திருச்சி ஒருவழி ரயில் பாதையில் விரிசல் ஏற்பட்ட நிலையில் முன்னாள் ரயில்வே ஊழியர் அதை பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து முன்கூட்டியே எர்ணாகுளம் - காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் நல்வாய்ப்பாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

நன்றி: தந்தி
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி