உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். அவ்வாறு வட நாடுகளில் இருந்து செல்லும் பக்தர்கள் ரயில் நிலையத்தில் ரகளையில் ஈடுபடுவதும், ரயில் பெட்டி கதவுகளை உடைப்பதும் போன்ற அநாகரீக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பிகாரில் இருந்து கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜுக்கு செல்ல ரயிலில் ஏசி பெட்டிகளின் கண்ணாடிகளை உடைத்து பயணிகள் ஏற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.