சென்னையின் பிரபலமான 'உதயம் தியேட்டர்' முழுவதுமாக இடிக்கப்பட்டுள்ளது. தியேட்டர் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அசோக் நகரின் அடையாளமாகவே உதயம் தியேட்டர் இருந்தது. இப்போது தியேட்டர் இடிக்கப்பட்டுள்ளது, அப்பகுதி மக்கள் மட்டுமின்றி சினிமா ரசிகர்கள், சினிமா கலைஞர்கள் என பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உதயம் தியேட்டர் இருந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட உள்ளது.