சென்னையின் பிரபலமான 'உதயம்' தியேட்டர் இடிக்கப்பட்டுள்ளது. உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் என நான்கு திரைகள் இந்த தியேட்டரில் இருந்தன. முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் நாளில் தியேட்டரே களைகட்டும். தங்களின் மனம் கவர்ந்த தியேட்டர் இடிக்கப்பட்டுள்ளதால் மலரும் நினைவுகளை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 42 ஆண்டுகளாக அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய இந்த கட்டிடம் இன்று அழ வைத்துள்ளது. #மிஸ் யூ உதயம்