முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் தைப்பூசத் திருவிழாவும் ஒன்றாகும். இந்தாண்டு விழா இன்று (பிப். 11) கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து திருச்செந்தூர் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்து வருவதை காண முடிகிறது.