திருப்பூர் மாவட்டம் உடுமலையில்
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித் திரிந்த பறவைகளே பழகி களித்த தோழர்களே பறந்து செல்கின்றோம் என்ற தமிழ் திரைப்பட பாடல் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்வுகளை உணர்வு பூர்வமாக காட்சிப்படுத்தி இருக்கும். அது போன்ற ஒரு நிகழ்வு தான் இன்று உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. தொலைத் தொடர்பு இல்லாத 1968-ம் ஆண்டு கால கட்டத்தில் படித்து முடித்த சுமார் 40 மாணவர்களை தேடிப்பிடித்து சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவது என்பது சாதாரண காரியம் அல்ல. இதற்காக குழு உருவாக்கப்பட்டு எட்டு திக்கிலும் சென்று சுமார் 4 வருட போராட்டத்திற்கு பின்பு நண்பர்களை தேடிப் பிடித்து அழைத்து வந்தனர். 56 ஆண்டுகளுக்கு பின்பு அதே தோழமையோடு ஒருவரை ஒருவர் சந்தித்த போது ஆனந்த கண்ணீர் மல்க ஆரத்தழுவி கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தினார்கள்.
மேலும் சந்திப்பின் நினைவுகளை என்றென்றும் தொடரும் வகையில் நினைவு பரிசுகளையும் செல்போன் எண்களையும் ஒருவருக்கு ஒருவர் வழங்கிக் கொண்டனர். அரசு ஆண்கள் பள்ளிக்கு நன்கொடையாக ஸ்பீக்கர் வழங்கப்பட்டது
விழாவுக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் விஜயகுமார் தலைமையில் , சுபகீத் மோகன் , சாம்பசிவம் நகரமன்ற உறுப்பினர் ஆசாத் , சகாதேவன் தண்டபாணி ஆகியோர் செய்து இருந்தனர்.