திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையத்தில் இருந்து திருமூர்த்தி மலை அமராவதி அணி முதலைப்பண்ணை உட்பட பல்வேறு இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன இருப்பினும் விடுமுறை தினங்களில் குறைவாக பேருந்துகள் இயக்கபடுகிறது. சுற்றுலா பயணிகள் அதிக அளவு
வரும் நிலையில் போதிய பேருந்துகள் இல்லாத காரணத்தால் பலமணி நேரம் நிற்க வேண்டி உள்ளது எனவே விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் கூடுதல் பேருந்துகள் சுற்றுலாத் தலங்களுக்கு விட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.