அரசுமுறைப் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று (பிப்., 10) டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் நேற்றிரவு அவருக்கு விருந்து அளித்தார். பாரிஸில் இன்று நடைபெறும் 2வது நாள் செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் மோடி பங்கேற்க உள்ளார்.