நடிகர் அஜித் தற்போது போர்ச்சுகலில் நடைபெறும் கார் ரேஸ் போட்டியில் கலந்துகொண்டு வருகிறார். அவரை காண பல அந்த நாட்டில் உள்ள பல தமிழ் ரசிகர்கள் நாள்தோறும் சென்று வருகின்றனர். இந்நிலையில், அந்த இடத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ஒரு பெண்ணின் Shoe Lace கழன்றுவிட அதனை அஜித் கட்டிவிடுகிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இதுதான் அஜித், இதுதான் அவருடைய எளிமையான குணம் என புகழ்ந்து வருகின்றனர்.