திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவில் பகுதியில் இருந்து வனப்பகுதியில் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். பஞ்சலிங்க அருவி பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.