தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் முருகன் ஆலயங்களில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அந்த வகையில் புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சூரிய உதயத்தைக் கண்டு பக்தர்கள் தரிசனம் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இங்கு காலை முதலே கந்தனுக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணைப் பிளந்து வருகிறது.