பவர் லிஃப்டிங் சவாலை முயற்சிக்கும் ஒரு நபரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்தக் காட்சிகளில், அவர் 165 கிலோ எடையை தன்னுடைய மனைவியின் உதவியுடன் தூக்க முயல்கிறார். அப்போது அதிக எடையின் காரணமாக அதை தூக்க முடியாமல் திணறுகிறார். அந்த வெயிட் லிஃப்ட் அவரது கழுத்தில் விழுந்து நசுக்கியது. வழியால் உயிர் போகும் நிலையில் இருந்த அந்த பாடி பில்டரை அவரது மனைவி வந்து காப்பாற்றினார். சற்று நேரத்தில் எமனே அவர் கண் முன் வந்தது போல் துடிதுடித்துப்போனார்.