காங்கேயம் அருகே சிவன்மலையில் உள்ள முருகன் கோவில் தைப்பூச தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் மகா அபிஷேகம் முதல் பூஜைகள் நடைபெற்றது. மகர புஷ்ப நல்லோரையில் முக்கிய நிகழ்வாக சுவாமியின் ரதத்திற்கு எழுந்தருதல் நடைபெற்றது. இதில் சாமி சுற்றி வரும் வழி நெடுகிலும் 10, 000 மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அரோகரா கோசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை 4 மணி அளவில் முதல் நாள் தேரோட்டமானது துவங்க உள்ளது. இந்த தேரோட்டத் திருவிழா 3 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்த தேர்த்திருவிழா கான திருப்பூர், ஈரோடு, கோவை, கரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து பல லட்சம் பக்தர்கள் கலந்துகொள்ள உள்ளனர். பாதுகாப்பு பணியில் திருப்பூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் 4 டிஎஸ்பிக்கள் 13 காவல் கண்காணிப்பாளர் உட்பட 450-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தேர் திருவிழா பணிகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இரத்தினம்பாள் மேற்பார்வையில் அறநிலையத்துறை ஊழியர்கள் செய்து வருகின்றனர்.