சுங்கச்சாவடிகளில் ரொக்கப் பரிவர்த்தனைகளால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையை FASTag கட்டண முறை மாற்றி அமைத்தது. இருப்பினும் வாகன ஓட்டிகள் FASTag கணக்குகளில் போதுமான பேலன்ஸ் வைத்துக் கொள்வதில் அலட்சியமாக இருந்தனர். இது தேவையற்ற தாமதங்கள் மற்றும் நெரிசல்களுக்கு வழிவகுக்கிறது. எனவே சுங்கச்சாவடியை அடைவதற்கு 60 நிமிடத்திற்கு முன்னர் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்கிற புதிய விதி கொண்டு வரப்பட்டுள்ளது.