கடல் வழியாக வந்த ஆங்கிலேயர்கள் சென்னை, கொச்சி, மேற்கு வங்காளம், குஜராத் போன்ற கடற்கரை மாநிலங்களில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தினர். இந்த இடங்களில் அரசாங்க கட்டிடங்கள் மற்றும் போக்குவரத்து போன்ற வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றன. ஆங்கிலேயர்கள் ஆண்ட 200 ஆண்டு கால கட்டத்தில் இந்தப் பகுதிகள் நல்ல முன்னேற்றத்தைக் கண்டன. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் இது போன்ற வளர்ந்த பகுதிகள் மாநிலங்களின் தலைநகராக மாற்றப்பட்டன.