குயிலின் பாரே சிண்ட்ரோம்(GBS) என்பது நம் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பே, நரம்புகளை தாக்கும் ஒரு தன்னுடல் தாக்க நிலையாகும். இது அனைத்து வயதினரையும் பாதிக்கலாம். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் இளம் வயதினரை பாதிக்கிறது. இதற்கான சரியான காரணம் இன்னும் புரிந்துகொள்ளப்படவில்லை. இருப்பினும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும் பாக்டீரியா/வைரஸ்களால் இது தூண்டப்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.