டெல்லியில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி, நொய்டா, குருகிராம், பீகார் மற்றும் உ.பி.யின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. டெல்லியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0ஆக பதிவாகியுள்ளது. டெல்லியில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் இருந்த சிசிடிவி கேமராவில் அதிகாலை 5.36 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காட்சிகள் பதிவாகியுள்ளன. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்குவதை இதில் காணலாம்.