அரசுப்பள்ளிகளில் இலவசமாக 3 மொழிகள் கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள்? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை தனது X தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், "தனியார் பள்ளிகளில் படிக்கும் திமுகவினரின் குழந்தைகள் மட்டும் மூன்று மொழிகள் கற்கலாம். அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மக்களின் குழந்தைகள் படிக்க வாய்ப்பு மறுப்பதா? உங்களுக்கொரு நியாயம், எளிய மக்களுக்கு ஒரு நியாயமா?" என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.