திருப்பூர் மாவட்டம்
உடுமலை அருகே
சூர்யா திருமண மஹாலில் உடுமலை நேசக்கரங்கள் மற்றும் எழுச்சி மகளிர் இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் ஊர்க்காவல் படை வீரருமான ராதாமணி ஜனவரி
10 , 11, 12 ஆகிய தேதிகளில் தாய்லாந்து நடைபெற்ற சர்வதேச மூத்தோருக்கான தடகளப் போட்டியில் பங்கேற்று
தல ஒரு தங்கம் ஒரு வெள்ளி பதக்கங்களை வென்று இந்தியாவுக்கும் தமிழ் நாட்டுக்கும் திருப்பூர் மாவட்டத்திற்கு உடுமலைக்கும் பெருமை சேர்த்த நிலையில் பாராட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் திருப்பூர் மாவட்ட ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் சதீஷ்குமார்
கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மற்றும் சமையல்
எரிவாயு பாதுகாப்பாகவும் சிக்கனமாகவும் பயன்படுத்துவது குறித்து உடுமலை செல்வி கேஸ் ஏஜென்சிஸ் உரிமையாளர் ஐயப்பன் செயல் விளக்கத்துடன் உரையாற்றினார். மற்றும் சர்வதேச மற்றும் தெற்கு ஆசிய மூத்தோர் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்கள் வென்ற பவானி , கனகவேணி மாணிக்கம் ஆகியோரும் சிறப்பிக்கப்பட்டனர். விழாவில் தேச கரங்கள் இயக்குனர் பால் நிலா இணை இயக்குனர் நேசமணி பால் அலுவலர்கள் எழுச்சி மகளிர் இயக்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.