பிப்ரவரி 14 உலக முழுவதும் காதல் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காதலில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் காதலர்களுக்கு பரிசுகள் வழங்கியும் சுற்றுலா தளங்களுக்கு அழைத்துச் சென்று தங்கள் காதலை வெளிப்படுத்துவர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மகாலட்சுமி நகர் பகுதியில் உள்ள இளைஞர்கள் சாலையில் கேக் வெட்டி காதலர் தினத்தை கொண்டாடினர். மேலும் காதலர் தினத்தை முன்னிட்டு பாடல் எழுதி இசையமைத்து காதலை வெளிப்படுத்தினர்.