உடுமலை: சமத்துவ கருத்தரங்கில் மும்மத தலைவர்கள் பங்கேற்பு

64பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அமைந்துள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் உலக சமய நல்லிணக்க வாரவிழாவை முன்னிட்டு சமத்துவ கருத்தரங்கம் நடைபெற்றது. உலக சமாதான ஆலய நிறுவனத் தலைவர் குருமகான் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் அன்பு நெறியில் இஸ்லாம் என்ற தலைப்பில் உடுமலை பூர்வீக பள்ளிவாசல் துணை இமாம் முஹம்மது இஸ்மாயில், அன்பு நெறியில் கிறிஸ்தவம் என்ற தலைப்பில் சிஎஸ்ஐ இம்மானுவேல் ஆலயத்தின் தலைவர் செல்வராஜ் அவர்களும், மற்றும் அன்பு நெறியில் இந்துத்துவம் குறித்து மெய்த்தவ பொற்சபையின் ஞான ஆசிரியர் மெய்த்தவம் அடிகள் கலந்துகொண்டு அனைத்து சமயங்களும் உயிர்களிடத்தில் அன்பு செலுத்துவதையே வலியுறுத்துவது குறித்து பேசினார்கள். 

செய்தியாளர்களிடம் பேசிய குருமகான்: சமயங்கள் ஏற்படுத்தப்பட்ட காலங்களில் மக்களிடையே இருந்த பிரிவினைகளை அனைத்தையும் நீக்கி அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற பெரும் முயற்சியினால் மக்களை ஒன்றிணைத்து நம்பிக்கையோடும் நல்லிணக்கத்தோடும் நல்லுறவுகளோடும் மற்றும் அனைவரும் அன்பு நெறியில் வாழ வேண்டும் என்பதற்காக அந்த காலகட்டங்களில் சமயங்கள் ஏற்படுத்தப்பட்டு அன்பு நெறியோடு வாழ்வது வலியுறுத்தப்பட்டது. எனவே அனைவரும் மதங்களில் கூறியுள்ளபடி அன்பு நெறியோடு வாழவேண்டும் என்றார். இந்நிகழ்வின் இறுதியாக உலக அமைதி தூதுவர் குருமகான் அருளுரை வழங்கினார்கள்.

தொடர்புடைய செய்தி