மூன்று பணயக்கைதிகளை ஹமாஸ் இன்று (பிப்.15) செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்தது. அவர்கள் இஸ்ரேலுக்கு திரும்பினர். பணயக்கைதிகளை விடுவிக்கப் போவதில்லை என்று கடந்த திங்களன்று ஹமாஸ் கூறியிருந்தது. விடுவிக்கவிட்டால் தாக்குதல் நடத்தப்படும் என கூறப்பட்ட நிலையில் பணய கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதற்கு ஈடாக இஸ்ரேல் 369 பாலத்தீன கைதிகளை விடுதலை செய்கிறது. சிலர் மேற்குக் கரையை அடைந்தனர். பெரும்பான்மையானவர்கள் காஸாவுக்கு வருகின்றனர்.