சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற நபரை பொதுமக்கள் தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த சத்தியன் என்பவரை சிலர் தோளில் தூக்கிச் சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து, பெண் காவலரின் புகாரை அடுத்து வந்த காவல் துறையினர் பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த நபரை கைது செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.