காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை சுகாதார பணிகளில் காவலாளி ஈடுபட்டிருந்த போது பள்ளியின் பின்புறம் உள்ள தொட்டியிலிருந்து கோதுமை நாகப்பாம்பு வெளிவந்தது. இதனை பார்த்த காவலாளி ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக மடத்துக்குளம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் நேரில் வந்த தீயணைப்புத்துறையினர் கோதுமை நாகப்பாம்பை லாவகமாக பிடித்து அதனை பையில் கட்டி வனத்தில் விடுவதற்காக எடுத்துச் சென்றனர்.
பாம்பு பள்ளியின் வளாகத்தில் இருந்ததால் மாணவர்கள், மாணவிகளிடையே சிறிது பதற்றம் நிலவியது. பள்ளியை சுற்றிலும் முட்புதர்கள் நிறைந்து உள்ளதால் அவ்வப்போது விச பூச்சிகள், பாம்புகள் பள்ளி வளாகத்தில் உள்ளே வருகிறது. இதனால் இதுபோன்ற பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகிறது. பள்ளி குழந்தைகளின் நலன் கருதி பள்ளியை சுற்றிலும் உள்ள இடத்தின் உரிமையாளர்கள் சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென பள்ளியின் ஆசிரியர்கள் தரப்பில் கூறப்பட்டது.