AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மறைந்த பிரபலங்களை உயிருடன் கொண்டு வருவது போலவும், அவர்களின் குரல்களைப் பயன்படுத்தியும் வீடியோக்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் மறைந்த நடிகர் விவேக்கின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் விவேக் மரம் நடுவது போலவும், கிராமத்தில் அமர்ந்து ஓய்வெடுப்பது போலவும் காட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோவை விவேக்கின் ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.