திருப்பரங்குன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு செல்லம் இந்து முன்னணி அமைப்பினரை தடுக்கும் வகையில் பல்லடத்தில் அனைத்து பகுதிகளிலும் வாகன சோதனை.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணியினர் இன்று ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்த நிலையில் திருப்பூர், கோவை பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் மதுரை செல்வதை தடுக்கும் விதமாக பல்லடம் போக்குவரத்து காவல்துறையினர் சாலைகளில் தடுப்புகள் அமைத்து தற்போது வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் இருந்து மதுரை செல்வதற்கு திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலை முக்கிய சாலையாக விளங்குகிறது. திருப்பரங்குன்றம் ஆர்ப்பாட்டத்திற்கு வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீசார் ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரை செல்லும் பேருந்துகள், கார்கள் ஆகியவற்றை சோதனை இட்ட பின்பே போலீசார் வாகனங்களை அனுப்பி வருகின்றனர்.
திருப்பூர் பல்லடம் சாலை, பல்லடம் தாராபுரம் சாலை, திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் வாகன சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர்.