விருதுநகர்: சின்னவாடி பகுதியில் உள்ள சக்தி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தின் காட்சிகள் வெளியாகியுள்ளது. பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில், அங்கிருந்த ஆறு அறைகளும் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இக்கோர விபத்தில் ராமலட்சுமி என்ற பெண் உயிரிழந்துள்ளார். மேலும், வெடி விபத்தில் படுகாயமடைந்த 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.