உடுமலை: தேவராட்டம் கும்மியாட்டம் ஆடி கிராம மக்கள் உற்சாகம்!

83பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை அருகே
கம்பால பட்டி கிராமத்தில் பாரம்பரியமான , கெண்டேரி அம்மன் கோவில் திருவிழா மூன்று தினங்களாக நடைபெற்றது. நேற்று நிறைவு நாளில் இரவு முழுவதும் காலங்கள் மாறினாலும் பண்பாடு கலாச்சாரம் மாறாத கிராம மக்கள் பாரம்பரியம் மற்றும் பண்பாடு காக்கும் விதமாக பாரம்பரிய இசைக்கருவிகளுடன் பெண்கள் கும்மியாட்டம் ஆடியும் ஆண்கள் கரும்புகளைக் கைகளில் வைத்துக்கொண்டு உற்சாகமாக தேவராட்டம் ஆடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் முன்னோர்கள் கூறிய அறிவுரையின் பேரில் பெரியவர்கள் முதல் இளைய தலைமுறையினர் கொண்டேரிஅம்மன் கோவில் திருவிழாவை வெகு சிறப்பாக கொண்டு கொண்டாடி வருகின்றோம் இதனால் கிராம மக்கள் ஆண்டு முழுவதும் நலமாக இருப்பதாகவும் கால்நடைகள் நோய்நொடி இன்றி இருப்பதாகவும் தெரிவித்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி