விழுப்புரம்: மது அருந்திவிட்டு அரசு பேருந்தை அதி வேகமாக ஓட்டிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செஞ்சியில் இருந்து இரட்டணி கிராமத்திற்கு செல்லும் அரசுப் பேருந்தின் ஓட்டுநர் மணி மதுபோதையில் இயக்கியுள்ளார். விபத்தை ஏற்படுத்தும் வகையில் தறிகெட்டு ஓடிய பேருந்தால் பயணிகள் அச்சத்தில் அலறினர். இதைத்தொடர்ந்து, பேருந்து நிறுத்தப்பட்டவுடன் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.