சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் மெட்ராஸ் காபி ஹவுஸ் என்ற கடை அமைந்துள்ளது. இந்த கடையில் நேற்று (பிப். 05) திடீரென பயங்கரமான தீவிபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த துரைப்பாக்கம் தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு அருகில் உள்ள கடைகளுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். தீவிபத்துக்கான காரணம் தெரியாத நிலையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.