இந்திய மணப்பெண் ஒருவர் வழுக்கை தலையுடன் திருமணம் செய்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்க வாழ் இந்தியரான நீஹர் சச்தேவா என்ற பெண்ணுக்கு அலோபீசியா என்ற குறைபாடு உள்ளது. இந்த குறைபாடு இருந்தால் உடலின் சில பகுதிகள் அல்லது அனைத்து பகுதிகளில் இருந்தும் முடி உதிர்தல் ஏற்படும். இந்நிலையில், அவர் தனது திருமணத்தின் போது வழுக்கையை மறைக்க முயற்சி செய்யவில்லை. மாறாக மிகவும் தன்னம்பிக்கையுடன் வழுக்கை தலையுடனே திருமணம் செய்துள்ளார்.