சென்னை அண்ணா சாலையில் நேற்றிரவு (பிப்.,4) ஸ்பைடர்மேன் உடையணித்து கட்டிடங்களில் இளைஞர் ஏறியுள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் பெயர் அக்பர் அலி என்றும் தனது ஸ்வீட் கடையில் வியாபாரம் இல்லாததால், விளம்பரத்திற்காக இதனை செய்ததும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு போலீசார் அனுப்பி வைத்தனர்.