விழுப்புரம் மயிலம் பகுதியில் மலைக்குன்றின் மீது முருகப்பெருமான் கோயில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் வள்ளி தெய்வானையுடன் இணைந்து நின்ற கோலத்தில் காட்சி தருகிறார் முருகப்பெருமான். இவர் ஒரு கையில் வேல், மற்றொரு கையில் சேவல் கொடி தாங்கி காணப்படுகிறார். இந்த கோயிலில் அர்ச்சனை செய்து மனமுருகி முருகனை பிரார்த்திக்கும் பக்தர்களுக்கு மன அமைதி கிடைப்பதோடு பண பிரச்சனைகளும் அகலும் என்பது நம்பிக்கை.