மழைக்காலத்தில் வயிற்றுத் தொற்றை தவிர்க்க வெளிப்புற உணவுகளை முக்கியமாக தெருவோர கடை உணவுகளை வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் தெருவோர உணவுகளில் சுகாதாரக் கேடுகள் அதிகமாக இருக்கலாம். மழைக்காலத்தில் வெளிப்புற உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் இரைப்பை, குடல் பிரச்சனைகள் மாதிரியான அவதிகளுக்கு உள்ளாகலாம். வாந்தி, வயிற்றுவலி, காய்ச்சல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.