உலக பாரம்பரிய வார விழா ஆண்டுதோறும் நவம்பர் 19 முதல் 25 வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினம் சுற்றுலா பயணிகள், பொதுமக்களிடையே தங்களது சமூக கலாச்சார பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, மாமல்லபுரத்தில் இன்று (நவ. 19) மட்டும் புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் இலவசமாக சுற்றி பார்க்கலாம் என தொல்லியல் துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.