71ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட கூட்டுறவு சங்க பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு சைபர் கிரைம் மற்றும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மேலாண்மை பற்றிய கருத்தரங்கம் விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு மண்டல இணை பதிவாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் துணை பதிவாளர் வீரபாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும் இந்த கருத்தரங்கில் கூட்டுறவு சங்க அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் மகளிர் சுய உதவி குழு பெண்களும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சைபர் கிரைம் எவ்வாறு நடக்கிறது அதிலிருந்து எவ்வாறு நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து சைபர் கிரைம் சார்பு ஆய்வாளர் கோபு மற்றும் தலைமை காவலர் முனியாண்டி ஆகியோர் எடுத்துரைத்தனர்.