ஒடிசா மாநிலத்தின் பத்மப்பூர் பகுதியில் உள்ள காட்டில் நேற்று (நவ. 15) ஐந்து வயது சிறுமி நிர்வாண நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பவ இடத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் தடயவியல் குழுவினருடன் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுமி உயிரிழப்புக்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும்.