தனது திருமண வீடியோ 2 ஆண்டுகளாக வெளியாகாமல் இருப்பதற்கு நடிகர் தனுஷ் தான் காரணம் என்று நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தனுஷை வன்மையாக கண்டிக்கும் நயன்தாராவின் பதிவிற்கு லைக் செய்து நடிகைகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஸ்ருதிஹாசன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா லட்சுமி, நஸ்ரியா, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நயன்தாராவுக்கு ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர்.