குளிர்காலத்தில் நீர் உட்கொள்ளல் குறைக்கப்படுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் குறைந்தது 2 லிட்டர் (8 கப்) தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். குளிர்காலத்தில் அதிகமாக தண்ணீர் குடிக்க தோன்றாது, இருந்த போதிலும் தண்ணீரை தவிர்க்காமல் குடிக்க வேண்டும் என்கின்றனர்.