நாதக-வில் இருந்து வெளியேறி திமுகவில் இணையப்போவதாக கூறப்படும் காளியம்மாள், திமுக தரப்பினரிடம் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதியில் தனக்கு சீட் ஒதுக்க வேண்டும் எனவும், அது இல்லை என்றால் ராஜ்யசபா தேர்தலை குறிவைத்திருப்பதாக கூறப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, நாதகவில் இருந்து வெளியேறிய நிர்வாகிகள் பலரும் இணைந்து தனிக்கட்சி தொடங்கி, அதற்கு காளியம்மாளை தலைமையேற்கச் சொல்லியும் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன என்றும் செய்திகள் பரவுகின்றன.