விருதுநகர்: விடுபட்ட தகுதியான மகளிருக்கு உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உறுதியளித்துள்ளார். அருப்புக்கோட்டை சின்ன வள்ளிக்குளத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பின் பேசிய அமைச்சர், "ஆண்களைவிட பெண்களே அதிகம் வேலை செய்கிறார்கள். அதை அங்கீகரித்து மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. விரைவில் விடுபட்ட தகுதியான மகளிருக்கு உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.