
வேலூரில் குட்கா பொருட்கள் விற்ற 7 கடைகளுக்கு சீல்
வேலூர் கொணவட்டம், மேல்மொணவூர், சைதாப்பேட்டை, சத்துவாச்சாரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜேஷ் மற்றும் போலீசார் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சில பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து 7 பெட்டிக்கடைகளில் இருந்து சுமார் 10 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. இதேபோல், வேலூர் புதிய பேருந்து நிலைய பகுதிகளில் உள்ள பெட்டிக்கடையில் குட்கா பொருட்களை விற்பனை செய்ததாக அண்ணாநகரை சேர்ந்த கன்னியப்பன் (வயது 65), நாராயணபுரத்தை சேர்ந்த கோவர்த்தன் (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.