வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காகிதப்பட்டறை பகுதியில் அருகருகே உள்ள நான்கு அரசு மதுபான கடைகளால் அந்த வழியே செல்லும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
போக்குவரத்துக்கும் இடையூறாக இருப்பதால் மதுபான கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் அல்லது அகற்ற வேண்டும் என வேலூர் தமிழக வெற்றிக் கழகத்தினர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.