வேலூர்: சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
வேலூர் மாவட்டம் கோப்ளாபுரம் காணாறு அருகில் பத்தாவது வார்டு அருகே சாலை அமைக்கும் பணிகளை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவிச்சந்திரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் நித்தியானந்தம் உடன் இருந்தனர்.