வேலூர் அடுத்த நஞ்சு கொண்டபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் பிரபாகரன். இவரும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த அன்பரசி என்ற பெண்ணும் கடந்த ஐந்து வருடமாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அன்பரசியை திருமணம் செய்து கொள்ள மறுத்ததோடு, தனது உறவினர் பெண்ணை கடந்த 15 நாட்களுக்கு முன்பு ராணுவ வீரர் பிரபாகரன் திருமணம் செய்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த இழப்பை அன்பரசி நேற்று வீட்டில் தூக்கிட தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் காதலித்து தனது பெண்ணை ஏமாற்றிய ராணுவ வீரர் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.