வேலூர் மாவட்டம் பாகாயம் அடுத்த மேட்டு இடையம்பட்டி சாலையில் லாட்ஜில், சூதாட்டம் நடப்பதாக பாகாயம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜன், தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற சோதனை செய்த போது, 13-பேர்கொண்ட கும்பல் அங்கு ரூபாய் நோட்டுகள் வைத்து சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியானது.
இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 13-பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 60 ஆயிரம் ரூபாய் பணமும் 5-இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்துச்சென்றனர்.