வேலூர் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 9) மீண்டும் வெயில் சதம் அடித்துள்ளது. வேலூரில் 101.3 ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்ததால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். வேலூரில் நாளை (ஏப்ரல் 10) முதல் வெப்பம் இயல்பை விட அதிகமாக இருக்கும் எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.